சதொசவில் பாவனைக்குதவாத பெரும் தொகை ரின் மீன்கள்!
சதொசவுக்கு வழங்கப்பட்ட இலட்சக்கணக்கான ரின் மீன்கள் மனித நுகர்வுக்கு பொருத்தமற்றவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ரின் மீன்கள் உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரசபை மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனம் ஆகியவற்றின் அனுமதியுடன் வழங்கப்பட்டிருந்தது. இது குறித்த தகவல் சதொசவின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,
குறித்த ரின் மீன்கள் கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனத்துக்கு(சதொச) இலங்கை துறைமுக அதிகார சபையால் கடந்த ஜூன் 7 ஆம் திகதி ஒப்படைக் கப்பட்டன. முன்னதாக தனியார் இறக்குமதியாளரால் இறக்குமதி செய்யப்பட்ட குறித்த ரின்மீன்களை சதொச நிறுவனத் துக்கு ஏலமின்றி வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
225 ரூபா விலையுள்ள குறித்த ரின்மீன் ஒன்று சதொசவுக்கு 325 ரூபாவுக்கு விற்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் பணம் செலுத்தாதது குறித்து இலங்கை துறைமுக அதிகார சபை பல சந்தர்ப்பங்களில் சதொசவுக்கு அறிவித்த போதிலும் இதுவரை பணம் வழங்கப் படவில்லை.
இதேவேளை இந்த விவகாரம் தொடர்பில் சதொச நிறுவனத் தலைவர் கூறுகையில், ”இந்த ரின் மீன்கள் நுகர்வுக்குப் பொருத்தமற்றவை என முறைப்பாடு வந்ததது. எனவே விற்பனை நிறுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்ட ரின் மீன்களுக்கு மட்டுமே துறைமுக அதிகார சபைக்கு உரிய தொகையைச் செலுத்துமாறு வர்த்தக அமைச்சால் அறிவிக்கப் பட்டுள்ளதாக தெரித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.