மலையக மக்களை ஏமாற்றிய பெரும்புள்ளி - ராஜபக்ஷகளிடம் வாங்கிய பெருந்தொகை லஞ்சம்
சமகால அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
தமது அன்றாட வாழ்வாதாரத்திற்கு உணவினை பெற்றுக்கொள்வதற்காகவே மக்கள் திண்டாடி வருகின்றனர்.
இந்நி்லையில் மலையக மக்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற ஒருவர் ராஜாங்க அமைச்சு பதவியை பெற்றிருந்தார். இதற்காக அரசாங்கம் வழங்கிய பெருந்தொகை டொலர்களை லஞ்சமாக பெற்றதாக அவருக்கு நெருக்கமான தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் டொலர் நெருக்கடி காரணமாக பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் புதிய அமைச்சரவையில் பொறுப்பேற்றவர்களுக்கு பெருந்தொகை டொலர் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளமை அம்பலமாகி உள்ளது.
அமைச்சரவை அமைச்சர்களுக்கு இரண்டு இலட்சம் அமெரிக்க டொலர்களும், ராஜாங்க அமைச்சர்களுக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களும் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான், வியாழேந்திரன், முஷாரப் மற்றும் மலையகத்தில் அரவிந்த குமார் ஆகியோர் ராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.