வெளிநாடொன்றில் பெண் உள்ளிட்ட இலங்கையர்கள் கைது ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி
பாதாள உலக குழுவை சேர்ந்த 6 பேர் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பெக்கோ சமன், தெம்பிலி லஹிரு மற்றும் பாணந்துறை நிலங்க உள்ளிட்ட 6 பாதாள உலக குழுவினர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.