கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி இதுவரையில் 123 பேர் உயிரிழப்பு!
கேரள மாநிலம் வயநாட்டில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123-ஆக அதிகரித்துள்ளதாக கேரள முதலமைச்சரின் அலுவலக அதிகாரி ஒருவர் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த துயரமான நிகழ்வுக் காரணமாக கேரளாவில் 2 நாட்கள் (ஜூலை 30,31) அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்த 129 நபர்களுக்கு உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சுமார் 250 பேர் இதுவரை மீட்கப்பட்டு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் மேலும் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.