இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை! மேலும் இருவர் உயிரிழப்பு.!
இலங்கையில் கன மழையுடனான வானிலை நிலவுவதனால் பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.
சீரற்ற வானிலையால் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படும் எனவும், இதனால் பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய தேவையேற்படின் இடம்பெயரத் தயாராக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அயகம, தும்பர பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இரத்தினபுரி, எலபாத்தவில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சடலத்தை மீட்கும் பணிகளில் இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.