ஆறு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் கடும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறு மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ளது.
இந்த மண்சரிவு எச்சரிக்கை நாளை (19) காலை 10:00 மணி வரை அமலில் இருக்கும் என தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் (NBRO) தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்படும், முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு
சீதாவாக்கை பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்
காலி
எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்
களுத்துறை
பாலிந்தநுவர மற்றும் இங்கிரிய பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் பாலிந்தநுவர
கண்டி
பஸ்பாகே கோரளை பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்
கேகாலை
புலத்கோஹுபிட்டிய, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட மற்றும் வரக்காபொல பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகள்
இரத்தினபுரி
எஹெலியகொட, கிரி எல்ல மற்றும் குருவிட்ட பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கே இவ்வாறு மண சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.