8 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று புதன்கிழமை (06) மாலை 4.00 மணி முதல் நாளை வியாழக்கிழமை (07) மாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
பதுளை ,காலி ,களுத்துறை, கண்டி ,குருணாகல் ,மாத்தறை, மாவடங்களுக்கு முதலாம்நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
கேகாலை - தெஹியோவிட்ட , மாவனெல்லை, யட்டியந்தோட்டை, புளத்கொஹுபிட்டிய , ருவன்வெல்ல, தெரனியகல, கலிகமுவ , அரநாயக்க , இரத்தினபுரி - குருவிட்ட, எஹெலியகொடை போன்ற பிரதேசங்களுக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.