மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!
தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நாளை (09.10.2023) பிற்பகல் மூன்று மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, காலி, மாத்தறை, பதுளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, கொழும்பு, கம்பஹா, மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் மத்துகமை, இங்கிரிய மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு நிற முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தின், அக்குரஸ்ஸ, பிட்டபெத்தர மற்றும் ஹக்மன பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு நிற முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, இமதுவ, நாகொடை மற்றும் யக்கலமுல்ல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு நிற முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.