நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
தேசிய கட்டிடம் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தற்போதைய அறிவிப்பின்படி, பல மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது.
குறித்த மண்சரிவு எச்சரிக்கை 04 டிசம்பர், மாலை 4 மணிக்கு தேசிய கட்டிடம் ஆராய்ச்சி நிறுவனத்தால் விடுக்கப்பட்டுள்ளதுடன் அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என குறிப்பிட்டுள்ளது.

பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு
பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமுள்ளதால்,உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய மாகாணம் : கண்டி மாவட்டம் - கங்கா இறல கொரலே, தும்பண , மேததும்பர , அக்குறண ,குண்டசாலை ,உடுநுவர, தொலுவ, உடுதும்பர , பாத்தஹேவாஹெட்ட , ஹரிஸ்பத்துவ , மீனிப்பே ,கங்காவத்த கொரலே , பஸ்பாகே கொரலே , பன்வில ,ஹதரலியத்த ,யட்டிநுவர , பாத்ததும்பர ,தெல்தொட்ட , பூஜாபிட்டிய ,உடபலாத்த
சபரகமுவ மாகாணம்: கேகாலை மாவட்டம் வரக்காப்பொல , அரணாயக்க, கலிகமுவ, ரம்புக்கனை , புலத்தகொஹுபிட்டிய , யட்டியாந்தோட்டை , மவனெல்ல , கேகாலை
வட மேல் மாகாணம்: குருநாகல் மாவட்டம் , ரிதிகம, நாரம்மல , பொல்கஹவெல, மல்லவபிட்டிய , அலவ்வ ,மாவத்தகம
மத்திய மாகாணம் : மாத்தளை மாவட்டம் யட்டவத்த , மாத்தளை, அம்பங்கங்க கொரலே ,பல்லெபொல , லக்கல பல்லெகம , ரத்தோட்ட, நௌல , உக்குவெல, வில்கமுவ
மேலும் குறித்த பகுதிகளில் மழை தொடர்ந்தால் மண்சரிவு அபாயம் மிக அதிகம் இருக்கும் எனவும் இடம்பெயர்வு உத்தரவை பின்பற்றுதல் அவசியம் என்றும் ஆற்றங்கரைகள், மலைச் சரிவுகள் மற்றும் மலைப் பகுதிகளில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
பாதுகாப்பை முதன்மைப்படுத்தி உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.