பிரதேச சபை தலைவரின் மனைவிக்கு கிடைத்த இரகசிய தகவலால் காத்திருந்த பேரதிர்ச்சி
லாகுகல பிரதேச சபைத் தலைவரின் மனைவியை வேறுவொரு பெண் சுத்தியால் தாக்கியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
லாகுகல பிரதேச சபைத் தலைவரின் மனைவிக்கு, கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் ஒரு வீட்டிற்குச் சென்றுள்ளார், அங்கு அவர் தனது கணவன் வேறொரு பெண்ணுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர், குறித்த பெண்ணுக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் தலைவரின் மனைவியை தலைவரும், குறித்த பெண்ணும் சேர்ந்து சுத்தியில் சரமாரியாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த தலைவரின் மனைவி பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் தலைவர் கைது செய்யப்படாத நிலையில், தலைவருடன் இருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.