மோடி கையில் லகான்; சீண்டாமல் ஒதுங்கும் அமெரிக்கா; காரணம் என்ன?
ரஷ்யாவுடன் மலிவு விலையில் எண்ணெய் வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா மேற்கொள்ள இருக்கிறது.
இந்தியன் ஆயில் நிறுவனம் மேற்கொள்ள இருக்கும் இந்த ஒப்பந்தம் கடைசி கட்டத்தை எட்டி உள்ளது. இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டி வந்தாலும்.இந்தியா மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாமல் அமெரிக்கா கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறது.
உக்ரைன் ரஷ்யா போரில் முதல் நாளில் இருந்தே இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு இருக்கிறது. உலக நாடுகள் என்ன அழுத்தம் கொடுத்தாலும்.. அமெரிக்கா தொடங்கி பாகிஸ்தான் வரை யார் என்ன நிலைப்பாடு எடுத்தாலும் கடைசி வரை போரில் நடுநிலையோடுதான் இருப்போம் என்ற நிலைப்பாட்டில்தான் இந்தியா உள்ளது.
கொஞ்சம் ரஷ்ய ஆதரவு போல தெரிந்தாலும் இந்தியா இதுவரை வெளிப்படையாக ரஷ்யாவை ஆதரிக்கவில்லை. மாறாக அமைதி பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்றே இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. அமெரிக்கா விமர்சனம் தொடக்கத்தில் இருந்தே இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா விமர்சனம் செய்து வருகிறது.
இந்தியா ரஷ்யா கேம்பில் இருப்பதாக அமெரிக்கா முதலில் தெரிவித்தது. அதன்பின் இந்தியா வரலாறு எழுதப்படும் போது தவறான பக்கங்களில் நிற்கும். இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கூறியது.
இந்தியாவை ஆங்காங்கே அமெரிக்கா விமர்சனம் செய்தாலும் வெளிப்படையாக இந்தியாவை அமெரிக்காவால் கண்டிக்க முடியவில்லை.அது முடியவும் முடியாது. ஆனால் இந்தியா மாறவில்லை இதனால்தான் ரஷ்யாவிடம் ஆயில் வாங்கும் இந்தியாவின் முடிவை அமெரிக்கா விமர்சிக்கவில்லை. இந்தியாவின் செயல்பாடு அமெரிக்காவின் பொருளாதார தடை விதிகளை மீறுவது போல தெரியவில்லை.
இந்தியா விதிமுறையை மீறி எண்ணெய் வாங்குவதாக நாங்கள் நினைக்கவில்லை என்று வெள்ளை மாளிகை கூறி உள்ளது. மேற்கு உலக நாடுகளின் அழுத்தங்களை எல்லாம் ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டுவிட்டு இந்தியா ரஷ்யாவிடம் தள்ளுபடியில் எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது. இந்தியா போர் விருப்பமில்லை ஆனால் இதை கண்டிக்க முடியாமல் அமெரிக்க தவித்து வருகிறது.
இதே விஷயத்தை சீனா செய்திருந்தால் கடுமையான கண்டனங்கள், மிரட்டல்கள் வந்து இருக்கும் ஆனால் இந்தியாவை அமெரிக்கா கண்டிக்காமல் இருக்க ஒரு காரணம் இருக்கிறது. அந்த காரணம் இந்தியாவை இப்போது எந்த காரணம் கொண்டும் அமெரிக்கா பகைக்க முடியாது. ஏற்கனவே தென் சீன கடல் எல்லையில் அமெரிக்கா இல்லை.
இந்தியாவையும் பகைத்தால் இந்திய பெருங்கடலில் நட்பு நாடு இல்லாமல் அமெரிக்கா அவதிப்படும். அது சர்வதேச அளவில் அமெரிக்காவை பாதிக்கும் தன்னையே சுடுவதற்கு சமம் இன்னும் சொல்லப்போனால் ஆசியாவில் அமெரிக்காவிற்கு பெரிய நட்பு நாடு என்று எதுவும் பெரிதாக இல்லை.
இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லாம் சீனா கேம்ப். மற்ற சில நாடுகளும் நடுநிலையான நிலைப்பாடு கொண்டது. ரஷ்யாவே பாதி ஆசியாவில் இருக்கிறது. மற்ற குட்டி குட்டி தீவு நாடுகளும் அமெரிக்காவிற்கு ஆதரவு இல்லை.
ஒரு சில நாடுகள் அமெரிக்காவிற்கு ஆதரவு கொடுத்தாலும் இந்தியா போல அவைகள் ராஜாங்க ரீதியாக வலிமையான நாடு கிடையாது. ஆசியாவில் நட்பே இல்லை இதனால் இந்தியா என்ன செய்தாலும் அதை லேசாக விமர்சிப்பதோடு அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இப்போது அவசரப்பட்டு ரஷ்ய விவகாரத்தில் இந்தியாவை எதிர்த்து பின்னர் சீனா வளரும் போது ஆசியாவில் துணைக்கு ஆள் இல்லாத நிலைக்கு தள்ளப்படுவதை அமெரிக்கா விரும்பாது. அதனால்தான் இந்தியா மீது அமெரிக்கா மிகவும் மென்மையான போக்கை கடைபிடிக்கிறது.