குவைத் எயார்வேஸின் கொழும்பு விமான சேவை ஆரம்பம்!
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி முதல் ,குவைத் எயார்வேஸின் கொழும்பு வணிக விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த விமான சேவை ஞாயிறு, புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறவுள்ளது.
கொழும்பு நகரத்தை முக்கிய சுற்றுலா தலமாக கொண்டு இந்த வணிக விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குவைத் எயார்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்தி செய்தல்
வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்தி செய்தல் மற்றும் பரந்த அளவிலான உலகளாவிய பயண விருப்பங்களை வழங்குதல் ஆகிய நொக்கங்களை அடிப்படையாக கொண்டு இந்த விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த தீர்மானம் குவைத் எயார்வேஸ் விமான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
குவைத் எயார்வேஸ், பயணிகளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் இடங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், அவர்களுக்கு கூடுதல் தேர்வுகள் மற்றும் மேம்பட்ட இணைப்பை வழங்குவதன் மூலமும் அதன் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கான தனது ஆர்வத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது.
குவைத் நெஷனல் எயார்வேஸ் லிமிடெட் என்ற பெயரில் 1953 இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், 1954 ஆம் ஆண்டு மார்ச் இல் செயற்பாடுகளைத் ஆரம்பித்துள்ளது.
அதேவேளை குவைத் அரசாங்கம் 1962 இல் விமான நிறுவனத்தின் முழு உரிமையையும் பெற்றதுடன் இது நாட்டின் தேசிய விமான நிறுவனமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.