குமார் சங்கக்காரவின் வெற்றிகளிற்கு இவரே காரணம்! நெகிழவைத்த மனைவி
இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரவின் வெற்றிகளிற்கு இறைவனே காரணம் என அவரது மனைவி யெஹாலி சங்கக்கார தெரிவித்துள்ளார்.
ராஜகிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ச்சியாக ஒட்டங்களை குவித்த துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார அதற்கான பெருமையை நான் இறைவனிற்கு வழங்குகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
15 வருட கிரிகெட் பயணம்
இதன்போது யெஹாலி சங்கக்கார மேலும் கூறுகையில்,
குமார் 15 வருடங்கள் கிரிக்கெட் விளையாடினார். அந்த 15 வருடங்களும் நாங்கள் பிரிந்து இருந்ததில்லை எனவும் சங்கக்காரவின் மனைவி குறிப்பிடார்.
அத்துடன் ரி 20 உலக கிண்ணப்போட்டிகளின் போது குமார் சங்கக்கார சிறப்பாக விளையாட நான் ஆண்டவனை வேண்டினேன்,நீங்கள் அவரை தொடர்நாயகனாக மாற்றுவீர்கள் என்பது எனக்கு தெரியும் என வேண்டினேன் என யெஹாலி சங்கக்கார தெரிவித்துள்ளார்.
குமார் இறுதிப்போட்டியில் அரைசதமடித்து இலங்கை அணிவெற்றிபெறச்செய்தார்,நான் முழங்காலில் அமர்ந்து அதற்கான பெருமையை ஆண்டவனிற்கு வழங்கினேன் எனவும் யெஹாலி சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.