இலங்கையர் உயிரிழந்த விவகாரம்; கோட்டாபய - இம்ரான்கான் பேச்சு
சியால்கோட்டில் பிரியந்த தியவதன கொல்லப்பட்டமை குறித்து இலங்கை மக்களுக்கு தமது தேசத்தின் கோபத்தையும் அவமானத்தையும் தெரிவிக்க இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பேசியதாக பாக்.பிரதமர் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில், இன்று கோட்டாபயவிடம் பேசியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இன்ரான்கான் , சற்று முன்னர் வெளியிட்ட டுவிட்டர் பதிவிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கைதானவர்கள் மீது சட்டத்தின் முழுத் தீவிரத்துடன் வழக்குத் தொடரப்படும் என, இலங்கை ஜனாதிபதியிடன் உறுதியளித்தேன் என்றும் பாக். பிரதமர் அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.