கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு: துப்பாக்கி வழங்கியவர் கைது, வெளியான பல உண்மைகள்
கடந்த 21 ஆம் தேதி கொட்டாஞ்சேனை பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைக் சம்பவத்திற்கு உதவிய மற்றுமொறு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கொலைக்காக துப்பாக்கி வழங்கிய சந்தேக நபர் நேற்று (23) பிற்பகல் மோதராவின் மெத்சந்த செவன பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மோதரை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, இந்த நாட்டில் குற்றச் செயல்களை நடத்தி வரும் நபர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சந்தேக நபர், கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரை, கொழும்பு கோட்டை பகுதியிலிருந்து கொஸ்கசந்தியா பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொட்டாஞ்சேனை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.