நீங்கள் கோழி பிரியர்களா? கோழியில் இந்த பகுதி ஆபத்து என தெரியுமா
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் கோழி என்றாலே மிகவும் பிடித்த உணவாகும். அதேபோல் ஆரோக்கியமான உணவு என்று பலர் கருதும் உணவுகளில் கோழி என்றாலும் கோழில் ஈரலில் தான் அதிக சத்து இருப்பதாக நாம் முதல் பதவில் பார்த்தோம்.
ஏனெனில் இது மிகவும் சுவையாக இருப்பதுடன், இதில் புரத சத்தும் அதிகளவு நிறைந்துள்ளது. எனினும் கோழி இறைச்சி ஒரு ஆரோக்கியமான இறைச்சி என்றாலும், அதன் ஒரு பகுதி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் நீங்கள் அறியாத விடயங்களை நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
கோழியின் தோலிலுள்ள தீங்கு பற்றி தெரிந்து கொள்ளுவோம்
கோழி தோலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு அதிகளவு உள்ளது. இதனால் நாம் எந்த ஒரு ஊட்டச்சத்தையும் பெறுவதில்லை. இதில் அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு உள்ளது.
இதில் சத்தான பொருட்கள் எதுவும் இல்லை, எனவே இது கோழியின் மிகவும் பயனற்ற பகுதியாகும். இது குளோரின் எச்சங்களைக் கொண்டிருக்கலாம், அவை சிக்கனின் தோற்றத்தை புதியது போல வைத்திருக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
இரண்டாவதாக, கோழியை கவர்ச்சிகரமானதாக காட்டுவதற்கு கடைக்காரர்கள் அதன் மீது ரசாயனங்களைத் தெளித்து விற்பனை செய்கின்றனர்.
கோழியின் தோலை சாப்பிட்டால் என்ன ஆகலாம்?
கோழியின் தோலை உண்பதால் உடலில் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு சேரும் மற்றும் உங்களது உடல் எடை கூடலாம். மேலும், கோழியின் தோலை உண்பதால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இது கறியின் சுவையை இரட்டிப்பாக்கும். எனினும் கோழியின் தோலைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இருப்பினும் ஆரோக்கியமான முறையில் சாப்பிட இரண்டு அல்லது மூன்று முறை கழுவி, உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து சமைக்கலாம்.
ஆனால் கோழி தோலை அதிகம் சாப்பிட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிகமாக சாப்பிடுவது உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.