யாழ்ப்பாணத்தில் கத்தியை காட்டி நகை கொள்ளையடித்த கும்பலுக்கு நேர்ந்த கதி!

Sri Lanka Police Jaffna Gold smuggling Sri Lankan Peoples Gold
By Shankar Aug 28, 2023 06:15 PM GMT
Report

யாழில் அதிகாலை வேளையில் கத்தியை காட்டி நகை கொள்ளையடித்த கும்பலை யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுச் செய்துள்ள நிலையில் திருடப்பட்ட நgகைகளையும் மீட்டுள்ளனர்.

யாழில் இரவு வேளைகளில் கூரையினை பிரித்து வீட்டுக்குள் இறங்கி வீட்டில் உள்ளவர்களை கத்தி காட்டி அச்சுறுத்தி நகை கொள்ளை அடித்து செல்லும் சம்பவங்கள் கடந்த வாரங்களில் இடம்பெற்றிருந்தது.

யாழ்ப்பாணத்தில் கத்தியை காட்டி நகை கொள்ளையடித்த கும்பலுக்கு நேர்ந்த கதி! | Knife Wielding Gang Of Jewelers Arrested In Jaffna

இவ் விடயம் தொடர்பில் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் 5 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகைகள் திருட்டு

யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான அணியினரால் குறித்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நல்லூர் பின் வீதியைச்சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் சங்கிலியன் வீதி பகுதியில் நேற்று அதிகாலை அரச உத்தியோகத்தரின் வீட்டுக்குள் புகுந்து கத்தி காட்டி மிரட்டியமை, கல்வியக்காட்டு பகுதியில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரை கத்தி காட்டி மிரட்டி பணம் கொள்ளை அடித்தமை மற்றும் பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்து கத்தி காட்டி மிரட்டி நகை கொள்ளை அடிக்க முயன்றமை, இணுவில் பகுதியில் வயோதிபர்கள் இருந்த வீட்டுக்குள்புகுந்து கத்தி காட்டி நகை கொள்ளை அடித்தமை போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் கத்தியை காட்டி நகை கொள்ளையடித்த கும்பலுக்கு நேர்ந்த கதி! | Knife Wielding Gang Of Jewelers Arrested In Jaffna

கொள்ளை கும்பல் கைது

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சங்கிலியன் வீதி பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட 24 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளதோடு இணுவில் பகுதியில் திருடப்பட்ட 4 பவுண் நகைகளும், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள், வாள், 4 கையடக்க தொலைபேசிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது நல்லூர் பின் வீதியால் செல்லும் வயது முதிர்ந்தவர்களை மிரட்டி கைத்தொலைபேசி, சிறிய தொகை பணம் திருடும் சம்பவத்திலும் குறித்த சந்தேக நபர்கள் ஈடுபட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கத்தியை காட்டி நகை கொள்ளையடித்த கும்பலுக்கு நேர்ந்த கதி! | Knife Wielding Gang Of Jewelers Arrested In Jaffna

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் ஆலோசனைக்கமைய யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜகத் விஷாந்தவிற்கு கீழ் இயங்கும் யாழ்ப்பாண மாவட்ட குற்றதடுப்பு பிரிவு உத்தியோகத்தர்களுக்கும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெரோல் அவர்களால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ்பரிசோதகர் தெ.மேனன் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் அவர்களின் கீழ் கவியரசன் ஜெயந்தன், கரன், சுஜந்தன், ஜோசப், சம்பத் அறுகம், பெண் கொஸ்டபிள் இரந்திகா ஆகியோர் அடங்கிய பொலிஸ் அணியினர் குறித்த கைது சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US