உணவில் கத்தி துண்டு; மீன் கறியில் கரப்பான் பூச்சி; துறைமுக சமையல் அறையின் அவலம்!
Sulokshi
Report this article
இலங்கை துறைமுக அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள கொழும்பு துறைமுகத்தின் சமையல் அறையில் உள்ள மீன் கறியில் கரப்பான் பூச்சி இருந்ததாக அந்த துறைமுக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த 12ஆம் திகதி இரவு சமையலறையிலிருந்து எடுக்கப்பட்ட உணவுப் பொட்டலத்தில் கரப்பான் பூச்சி இருந்ததாகவும் கிழக்கு கொள்கலன் முனையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உணவு , நிர்வாகம் ,தரம் ஆகியவற்றில் பாரிய பிரச்சினை
கொழும்பு துறைமுக சமையலறையில் உணவு மற்றும் அதன் நிர்வாகம் மற்றும் தரம் ஆகியவற்றில் பாரிய பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் கூறினார். , சில நாட்களுக்கு முன்னர் உடைந்த கத்தியின் ஒரு துண்டு உணவில் காணப்பட்டதாகவும் ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.
சில தொழிற்சங்கங்களின் செல்வாக்கால் அதிகாரிகள், ஊழியர்கள் சமீபகாலமாக மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அதிருப்தியால் உணவு பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
துறைமுக அதிகாரசபைக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட பலருக்கு அதன் நிர்வாகம் தொடர்பில் சரியான புரிதல் இல்லை என தெரிவித்த ஊழியர்கள், தற்போதைய நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஒருவர் துறைமுக சமையலறையில் இருந்து மேலதிகமாக உணவுகளை எடுத்துச் சென்று பணம் செலுத்தச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.
துறைமுகத்தில் உணவு விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என சமையலறை ஊழியர்கள் தலைமை அதிகாரியிடம் கூறியதாகவும் துறைமுக ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.
இச்சம்பவம் குறித்து துறைமுக சமையலறை பணிப்பாளர் தான் , விடுமுறையில் கிராமத்தில் இருப்பதாகவும், அதனால் தனக்கு இதுபற்றி தெரியவில்லை என்றும், இது குறித்து துறைமுக சமையலறை மேலாளரிடம் கேட்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் துறைமுக அதிகார சபையின் தலைவர் அட்மிரல் எஸ். எஸ். ரணசிங்க , உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக தமக்கு முறைப்பாடு கிடைக்கவில்லை என தெரிவித்த்தாகவும் கூறப்படுகின்றது.