கிண்ணியா படகு விபத்து; 6 பேர் வீடுகளுக்கு திரும்பினர்
திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்றையதினம் இடம் பெற்ற படகு விபத்து சம்பவத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 06 பேர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிண்ணியா தளவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு பேரே இன்று வீடு திரும்பியதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஜிப்ரி தெரிவித்தார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கும் மற்றுமொருவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏனையோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி களப்பில் கடத்து தோணி நேற்று விபத்திற்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்ததக்கது.