கிளிநொச்சி புளியம்பொக்கணை கமநல சேவை நிலையம் சென்ற இருவர் தற்போது வைத்தியாசாலையில்...
கிளிநொச்சி புளியம்பொக்கணை கமநல சேவை நிலையத்திற்கு உரம் பெறுவதற்காக சென்ற வேளை நேற்றைய தினம் ( 05) ஒருவரும் இன்றைய (06 )தினம் ஒருவரும் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது , ஆலமரத்தில் குளவிக் கூடு ஒன்று இருப்பதாக தெரியவந்த நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியப்போக்கு காரணமாக நேற்றையதினம் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவரும் நிலையில் இன்றைய தினமும் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் குளவிக்கூட்டினை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.