கிளிநொச்சியில் திடீரென தீ பற்றி எரிந்த தும்புத் தொழிற்சாலை
கிளிநொச்சியில் திடீரென ஏற்பட்ட தீயினால் தென்னந்தோப்பு எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலை ஒன்றிலேயே இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு திடீரென ஏற்பட்ட இத் தீயினால் 50க்கும் மேற்பட்ட பயன் தரக்கூடிய நிலையில் இருந்த தென்னை மரங்கள் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தும்பு தொழிற்சாலை
வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத நிலையில் தும்பு தொழிற்சாலை தொழில் நடவடிக்கை இடம்பெறாத நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீயினை கட்டுப்படுத்த அப்பகுதி மக்கள், இடர் முகாமைத்துவக் குழுவினர், கிளிநொச்சி தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.