தமிழர் பகுதியில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்!
இராமநாதபுரத்தில் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து சம்பவம் இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இன்று மாலை 4.30 இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தருமபுரம் பகுதியிலிருந்து இராமநாதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் இராமநாதபுரம் பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபொழுது அதில் ஒருவர் உயிரிந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இராமநாதபுரம் கல்மடு நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயதான கனகரத்தினம் கோசிகன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காயமடைந்ததில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மற்றும் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த இந்த சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.