கிளிநொச்சியில் டீசல் பெற வந்த உழவு இயந்திரத்திற்கு ஏற்பட்ட நிலை! விவசாயிகள் விசனம்
கிளிநொச்சியில் உழவு இயந்திரம் ஒன்று வாய்க்காலில் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (25-03-2022) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு அதிகளவான உழவு இயந்திரங்கள் வருகை தந்திருந்தன.

இதன்போது, குறித்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டில் இருந்து விலகி அருகில் உள்ள நீர்பாசன வாய்க்காலில் விழுந்துள்ளது.

விபத்துக்குள்ளான உழவு இயந்திரத்தை மீட்பதற்கு விவசாயிகள் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் விவசாயிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.