ஆபத்தான நிலைக்குள் கிளிநொச்சி பசுமைப்பூங்கா!
கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி பசுமைப்பூங்கா ஆபத்தான நிலைக்குள் தள்ளப்படுவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர். பசுமை பூங்காவில் சிறுவர்கள் அதிகமாக பயன்படுத்தி வந்தனர்.
40 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த பூங்காவானது, மாவட்டத்தின் மக்களிற்கு பொழுது போக்கக்கூடிய ஒரேயொரு பிரதான இடமாகவும் அமைந்துள்ளது.
40 மில்லியன் ரூபா செலவில் பூங்கா
கிளிநொச்சி மக்களின் பொழுதுபோக்கு வசதியை மேம்படுத்தும் நோக்குடன் “சுகித புரவர“திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபா செலவில் நிரமானிக்கப்பட்ட குறித்த பசுமை பூங்காவானது கடந்த 22.02.2019அன்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
பூங்காவில் சிறுவர்களிற்கான பொழுது போக்கு வசதிகள் அதிகளவில் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்ட போதிலு்ம, அவை தற்பொழுது படிப்படியாக அழிவடைந்து வருகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதானமாக அங்கு காணப்படும் தொங்குபாலமானது 1,400,000 ரூபா செலவில் கரைச்சி பிரதேச சபையினால் 2019ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
அந்த தொங்குபாலமானது தற்பொழுது பாதுகாப்பு வசதிகளின்றி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், இதனால் அங்கு பொழுதுபோக்க செல்லும் மக்களுக்கு அது ஆபத்தானதாக மாறிவருவதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனை செலுத்தி தொங்கு பாலத்தை சீர் செய்யவேண்டுமெனவும் பிரதேசமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.