பெண்ணிடம் வழிப்பறிகொள்ளை; மடக்கிப்பிடித்த இளைஞர்கள் நையப்புடைப்பு!(Photos)
மட்டக்களப்பு - கறுவாக்கேணி பிரதான வீதியில் சைக்கிளில் பயணித்த கிண்ணையடிச் சேர்ந்த பெண்ணருவரின் (handbag) கைப்பையை மோட்டார் சைக்கிளில் வந்த இருநபர்கள் திருடி தப்பியோடியுள்ளனர்.
இதன் போது இளைஞர்கள் அவர்களை மடக்கிப்பிடித்து குறித்த பெண்ணின் (handbag) கைப்பையை திருடர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.
அதோடு சந்தேக நபர்கள் நயப்புடைக்கப்பட்டு வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் பிடிபட்ட இருவரும் பிற மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான ஏதோனும் திருட்டுச் சம்பவம் இதற்கு முன்னர் நடந்திருந்தால் உங்களின் தகவலை வாழைச்சேனை பொலிஸாரிடம் முறையிடுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






