உச்சத்தலைவர் கமேனி வீரமரணம்; கொழும்பிலுள்ள ஈரான் தூதரகம் இரங்கல்
இஸ்ரேல் - அமெரிக்க கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்த நிலையில் கொழும்பிலுள்ள ஈரான் தூதரகம் இரங்கல் பதிவு புத்தகம் ஒன்றைத் திறப்பதாக அறிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் உச்சத்தலைவர் "வீரமரணம்" அடைந்ததாக, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு மற்றும் இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு ஈரான் தூதரகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மார்ச் 4, 5, 6 ஆகிய திகதிகளில் இரங்கல் பதிவு புத்தகம்
அதோடு மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், கொழும்பு 7, பௌத்தாலோக மாவத்தை, இலக்கம் 222 இல் அமைந்துள்ள தூதுவரின் இல்லத்தில் எதிர்வரும் மார்ச் 4, 5, 6 ஆகிய திகதிகளில் இரங்கல் பதிவு புத்தகம் வைக்கப்படவுள்ளது.
மேலும் தூதரககத்திற்கு நேரில் வருகை தர இயலாதவர்கள், ஈரான் தூதரகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தமது இரங்கல் செய்திகளை அனுப்பி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.