வாகன இறக்குமதி குறித்து வெளியான முக்கிய தகவல் ; காத்திருக்கும் சிக்கல்
வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது சந்தையில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் வாகனத் தேவை தற்போது பெருமளவில் பூர்த்தியாகியுள்ளதால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இம்முறை வாகன இறக்குமதியால் கிடைக்கும் வரி வருமானம் குறையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி கொள்கை
எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதி கொள்கையை நீட்டிப்பது தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் தீர்மானம் முக்கியமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிக இறக்குமதி வரிகளை தொடர்ச்சியாக விதிப்பதை விட, அரச செலவினங்களை திறம்பட முகாமைத்துவம் செய்து பொருளாதார சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதன் மூலம் நாட்டின் வரி வருவாயையும் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.