முத்தையன்கட்டு அணை தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்
முத்தையன்கட்டு அணையின் வால் கட்டு அருகில் சிறிய அளவிலான திருத்த வேலை நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் நீர்ப்பாசன திணைக்களம், பாதுகாப்புப் படைகள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் “முத்தையன்கட்டு அணையில் சேதம்” என்ற வதந்தி பரவி வருகிறது. இது தவறான தகவல் எனவும் அணையில் எந்தவித சேதமும் இல்லை எனவும் வால்கட்டு அருகே சிறிய திருத்தும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறன.

மேலும் “பதற்றம் அடைய வேண்டாம், வதந்திகளை நம்ப வேண்டாம், எந்தவொரு ஆபத்தான சூழ்நிலையிலும் ஏற்பட்டால், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு (DDMCU) அதிகாரப்பூர்வமாக உடனடியாக தகவல் வழங்கும் ” என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.