கேது பெயர்ச்சியால் இந்த ராசிகாரர்களுக்கு சிக்கல்கள் காத்திருக்கு ; அவதானம்
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசியினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனிக்கு அடுத்தப்படியாக அச்சத்தை ஏற்படுத்தும் கேதுவின் பெயர்ச்சி சில ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
அந்த வகையில் வரும் ஏப்ரல் 22ஆம் திகதி கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அவர் தனது சொந்த நட்சத்திரமான மக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சி சில ராசிகளுக்கு அசுப பலன்களை கொடுக்க கூடும். இதனால் எந்தெந்த ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

எந்தெந்த ராசிகள்
மேஷம்: கேது பகவான் மக நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையும் பொழுது மேஷ ராசிக்காரர்களுக்கு எதிர்மறையான ஆற்றல்கள் கிடைக்கக்கூடும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கலாம். எடுக்கும் காரியங்களில் தாமதங்கள் ஏற்படக்கூடும். குழந்தைகள் குறித்த கவலைகள் அதிகரிக்கும். குடும்ப உறவில் பிரச்சனைகள் ஏற்படலாம். முதலீடுகளின் பொழுது கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் இழப்புகளை சந்திக்க நேரிடலாம்.
மிதுனம்: குடும்ப உறவுகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். சகோதரர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மன குழப்பங்கள் அதிகரிக்கலாம். பணியிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். பண விஷயங்கள், ஆன்லைன் பரிவர்த்தனைகள், பணம் கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் இருக்க வேண்டும். கடன் வாங்குவதையோ, கொடுப்பதையோ தவிர்க்கவும்.
கன்னி: எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அடிக்கடி எதிர்பாராத பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள், சங்கடங்கள் ஏற்படும். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். நிதி சார்ந்த சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுடைய ஆடம்பரமான அல்லது விலை உயர்ந்த பொருட்கள் மீது கவனத்துடன் இருக்க வேண்டும். அது காணாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு.
விருச்சிகம்: மக நட்சத்திரத்தில் கேது அமர்வதால் தொழில் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படலாம். வேலையிழப்பு அல்லது பணியிட மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பெற்றோர் உடல் நலனில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். வேலையில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைகளைத் தரும்.
மீனம்: தேவையற்ற அலைச்சல்களால் உடல் சோர்வு ஏற்படும். கடன் தொல்லைகள் அதிகரிக்கலாம். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வேலையை காப்பாற்றிக் கொள்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே தகராறுகள் ஏற்படக்கூடும். தொழில் செய்து வருபவர்கள் பிரச்சனைகளை சந்திக்கலாம். போட்டி, பொறாமைகள் அதிகரிப்பதால் தொழிலில் மந்த நிலை உருவாகலாம்.