யாழில் 2.7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் ஐவர் கைது
யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளில், 2.7 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 121 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான 2 படகுகளில் 119.5 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக கடந்த 27ஆம் திகதி மன்னார் வங்காலை பகுதியில் மேலும் ஒருவர் 2.3 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சிக்கியிருந்தார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 முதல் 51 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள், கேரளா கஞ்சா மற்றும் டிங்கி படகுகளுடன் மேலதிக விசாரணைக்காக நெடுந்தீவு மற்றும் வங்காலை காவல் நிலையங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.