வீட்டில் வெள்ளி வைத்தால் செல்வம் பெருகும் ; ஜோதிடம் சொல்லும் ரகசியங்கள்
வீட்டில் வெள்ளிப் பொருட்களை சரியான திசையில் வைக்க, செல்வ வளமும் மன அமைதியும் அதிகரிக்க வாய்ப்பு! இது குறித்த தகவல்களை நாம் இங்கு பார்ப்போம்.
வெள்ளி, பாரம்பரிய ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒரு உலோகம். திருமண நிகழ்வுகளிலோ, ஆன்மீக வழிபாட்டிலோ, வீட்டு அலங்காரத்திலோ வெள்ளிப் பொருட்கள் அதிகம் பயன்படுகின்றன.
குறிப்பாக, பூஜைகளில் வெள்ளி விளக்கு, தட்டு, சாம்பிராணி கரண்டி, சந்தனக் குடம் போன்றவை வழிபாட்டு முறைகளில் முக்கிய இடம் பெறும் வீடுகளில் வெள்ளியில் ஆன விநாயகர், லட்சுமி, அன்னபூரணி சிலைகள் இடம் பெற்றிருக்கும்.
வெள்ளி நகைகளை அணிவது உடல், மன அமைதியை வழங்கும். பௌராணிக நம்பிக்கையின் படி, சந்திரனுடனும் சுக்கிரனுடனும் வெள்ளிக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. சந்திரன் மனநிலையை பிரதிபலிப்பதாகவும், சுக்கிரன் செல்வத்துடன் தொடர்புடையதாகவும் கருதப்படுவதால், வெள்ளி அணிவது நேர்மறை ஆற்றலை உண்டாக்கும்.
வீட்டில் வெள்ளிப் பொருட்களை வைத்திருப்பது எதிர்மறை சக்திகளை நீக்கி, ஆன்மீக மற்றும் பொருளாதார வளத்தை அதிகரிக்கும். பூஜை அறையில் வெள்ளி விளக்குகள் அல்லது சிலைகளை வைப்பதால், வீட்டில் அமைதி நிலவும். வெள்ளியில் ஆன கடவுள் சிலைகளை பூஜை செய்வதால், குடும்பத்தில் நலமோடும், செழிப்போடும் வாழ்வதற்கு வழி வகுக்கும்
வீட்டில் வெள்ளிப் பொருட்களை வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் வைப்பது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த திசைகள், செல்வம் மற்றும் ஆன்மீக சக்திகளை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. வீட்டு மையப்பகுதியில் வெள்ளிப் பொருட்களை வைக்க வேண்டாம், இது நன்மையை குறைக்கும் என சொல்லப்படுகிறது.
வெள்ளிப் பொருட்கள் அதிக சக்தி வாய்ந்தவை. அதனால், அதை சரியாக கையாள வேண்டும். வெள்ளி நகைகள் அல்லது பூஜைப் பொருட்களை சிவப்பு துணியில் சுற்றி வைத்தால், சந்திரனின் சக்தி வலுப்பெற்று, மன அமைதி கிடைக்கும். மேலும், வெள்ளியை சிவப்பு துணியில் கட்டி மேற்கு திசையில் வைக்கும்போது, வீட்டில் செழிப்பு பெருகி, நன்மைகள் அதிகரிக்கும்.