காத்தான்குடியில் வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார்! சிக்கிய மர்மபொருள்
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள வீடொன்றில் இருந்து 1 கிலோ 659 கிராம் கேரளா கஞ்சாவுடன் 55 வயதுடைய வியாபாரி ஒருவரை கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் (22-07-2023) குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டபோது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தெரிவித்தார்.
மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன் போது வியாபாரத்துக்காக கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 659 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டதுடன் 55 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ள நிலையில், விசாரணையின் பின்னர் சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.