கதிர்காமம் காட்டுப்பாதை இன்றுடன் பூட்டு ;40ஆயிரத்துக்கு மேற்பட்ட பாதயாத்திரீகர்கள் பயணம்!
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை இன்று (24) வெள்ளிக்கிழமை மூடப்படவிருக்கிறது.
அதன்படி இன்று பிற்பகல் 3 மணியுடன் கதிர்காமம் காட்டுப்பாதை பூட்டப்படும். இந்த வருட பாதயாத்திரைக்கான காட்டுப் பாதை கடந்த 10 ஆம் திகதி திறக்கப்பட்ட நிலையில் 15 தினங்களின் பின் இன்று மூடப்படவுள்ளது.
இம்முறை இதுவரை இப்பாதையால் சுமார் 40ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பயணித்துள்ளதாக உகந்தமலை முருகன் ஆலய வண்ணக்கர் தெரிவித்தார். அதேவேளை பாதயாத்திரையின்போது இதுவரை மாரடைப்பால் நான்குபேர் மரணித்துள்ளனர்.
உகந்தமலை முருகனாலய வருடாந்த உற்சவம் கடந்த 15ஆம் திகதி ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி நிறைவடையும்
. இந் நிலையில் வரலாற்றில் கானகப் பாதை திறந்த( 10) முதல் நாளில் சுமார் 16000 பாதயாத்திரீகர்கள் பயணித்தமை இதுவே முதல் முறையாகும்