கர்மா மிகவும் வலியது; 2009 முள்ளிவாய்க்காலும்.... இன்றைய கொழும்பும்! வைரலாகும் பதிவு
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து அரசங்கத்துக்கு எதிராக மக்கள் காலி முகத்திடலில் கூடாங்களை அமைத்து தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
ராஜபக்ச அரசாங்கத்தை வீடுகளுக்கு செல்லுமாறு வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்ட,ம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2009 முள்ளிவாய்க்காலில் நாம் பட்ட கஸ்ரங்களின் கர்மா இன்று செயல்பட்டுக்கொண்டிருப்பதால முகநூல் வாசி ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில்,
கர்மா வலியது எங்கள் வீடுகள் தகர்க்கப்பட்டது. எங்கள் வயல்கள் கொளுத்தப்பட்டது. எங்கள் படகுகள் நொறுக்கப்பட்டது.எங்கள் கிராமங்கள் சூரையாடப்பட்டது.உறவுகள் கொல்லப்பட்டார்கள்.
சகோதரிகள் தாய்மார் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு முலை அறுத்துக்கொல்லப்பட்டார்கள்.சதியால் நிகழ்ந்த தோல்வியால் கூடாரங்களில் தங்கினோம்.
இதில் ஒன்றுகூட உங்களுக்கு நிகழவில்லை ஆனாலும் இன்று கூடாரங்களில் வாழ்க்கை. இதுதான் கர்மா வலியது என்பது. எங்கள் தனித்துவத்தை பாதுகாத்தவண்ணம் உங்களுக்கு உதவுவோம்.உடனிருப்போம்.
தகுதியற்ற தலைவர்களால் நாடு நாசமாய்ப்போவதில்லை. தகுதியற்ற தலைவர்களைத்தெரிவுசெய்யும் மக்களால் நாடு நாசமாகின்றதாக அவர் தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.