பொல்லாத கண் திருஷ்டியை பொடி பொடியாக்க இந்த ஒரு பொருள் போதும்!
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்ல நாம் கேள்விப்பட்டதுண்டு. கண் திருஷ்டி ஆனது அனைத்திலும் விட ஒரு கொடுமையான வியாதியைப் போன்றது.
இன்றைய காலக்கட்டத்தில் பல குடும்பங்கள் ஒன்றும் இல்லாமல் போவதற்கு இந்த கண் திருஷ்டியும் ஒரு காரணம் என்றே சொல்லலாம்.
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது
அன்னியோன்னியமாக இருக்கும் கணவன் மனைவி எங்காவது ஒன்றாக சந்தோஷமாக கிளம்புவார்கள். கண் திருடி பட்டு விட்டால் போதும் திரும்பும் பொழுது கீரியும் பாம்பும்போல சண்டை சச்சரவுமாகத் தான் வருவார்கள்.
அதே போல் சிலர் வியாபாரத்தில் அவர்களுக்கு என்ன நன்றாக வியாபாரம் ஆகிறது என்று சொன்னால் போதும். அடுத்த நாள் ஒரு ரூபாய் கூட வராது. இப்படி இந்த கண் திருஷ்டிக்கு அத்தனை பெரிய சக்தி உள்ளது.
கண் திருஷ்டியை போக்க
நம் வீட்டு பெரியவர்களும் பல வழிமுறைகளை கையாண்டு இருப்பார்கள். அதனால் தான் நம் முன்னோர்கள் உப்பு மிளகாய் வைத்து சுற்றி போடுவது, எலுமிச்சை பழம் சுற்றி போடுவது, வீட்டில் எலுமிச்சை பழத்தை கட்டி தொங்க விடுவது, வியாபாரம் செய்யும் இடத்திலும் இதே போல செய்வது என கண் திருஷ்டி கழிக்க பல்லாயிரம் கணக்கான வழிமுறைகள் உள்ளது.
கண் திருஷ்டி போக பரிகாரம்
கண் திருஷ்டி போக வியாபாரம் செய்யும் இடத்தில் வெள்ளை எருக்கன் விநாயகரை வைப்பது மிகவும் விசேஷம். அது மட்டும் இன்றி யானை கண் பதித்த திருஷ்டி படத்தை வெளியில் மாட்டி தொங்க விடுவது கண் திருஷ்டிகளை உங்களை நெருங்காமல் காக்கும்.
இத்துடன் கற்பூரம் சுற்றி போடுவது போன்றவற்றை தவறாமல் செய்வதுடன் இந்த ஒரு எளிய பரிகாரத்தையும் செய்து கொள்ளலாம்.
எப்போது செய்யலாம்?
இந்த பரிகாரத்தை நாம் பௌர்ணமி நாளில் செய்யலாம். பஞ்சமி நாளில் இதை செய்யலாம். இது அனைத்தும் மிக விசேஷமான பலனை கொடுக்கும்.
அதிக கண் திருஷ்டியால் அவதிப்படுபவர்கள் இந்த தினங்களில் தொடங்கிய இந்த பரிகாரத்தை வார வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்வதை வழக்கமாக கொள்ளலாம்.
ஒரு சிறிய கிண்ணத்தில் கைப்பிடி வெண்கடுகை போட்டுக் கொள்ளுங்கள். அதன் மேல் இரண்டு சூடத்தை வைத்து இதை கடை அல்லது வீட்டில் வாசலில் வைத்து எரிய விடுங்கள்.
வெண்கடுகானது படப்படவென பொரிவது போல கண் திருஷ்டி அனைத்து பொரிந்து தவிடு பொடி ஆகி விடும்.