திருகோணமலையில் பரிதாபமாக உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்!
திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாத்தியகம பொது மைதானத்தில் நடைபெற்ற காணிவேல் நிகழ்வு ஒன்றில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் கந்தளாய் வாத்தியகம பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் ஜே.எம்.ஜனக சூரன்ஜீவ கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
கடந்த 20-07-2023 திகதி இரவு 11.30 மணியளவில் காணிவேல் நிகழ்வில் மேல் பலகையில் கடமையில் இருந்த போது சைக்கிள் ஓடும் கிணற்றின் மேல் பகுதியில் இருந்த பலகை உடைந்து கீழே விழுந்ததில் பலத்த காயங்களுடன் கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.