கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் கலை அமுத விழா 2023!
கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரியின் 'கலை அமுத விழா 2023' கண்டி இந்து கலாசார மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (11.08.2023) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன், மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான் உரையாற்றுகையில் “பலர் அரசியலை சாக்கடை என்று கூறுகின்றார்கள்.
ஆனால், அதனை சுத்தம் செய்வதற்கு யாரும் வருவதில்லை.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பரிணாமங்களுடன் விஸ்தரித்து பல இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சி நெறிகளை வழங்கி நாட்டின் கொள்கை தீர்மானத்தில் சந்தர்ப்பத்தையும் வழங்கி வருகிறோம் எனத் தெரிவித்தார்.
கண்டி புனித சில்வஸ்டர் கல்லூரி இலங்கைக்கு இளம் தலைவர்களை உருவாக்குகின்றனர்.
இம்மகத்தான செயலில் நானும் இணைந்துகொள்வது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இக்கல்லூரி கட்டட வசதிகளையும் நவீன கற்றல் வசதிகளையும் எதிர்பார்த்து இருப்பதை நான் அறிந்தேன்.
அந்த வகையில், எனது அமைச்சின் நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி ஊடாக இக்கல்லூரிக்கு நவீன திறன் வகுப்பறை ஒன்றிணையும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கட்டடத்தையும் வழங்க நான் தீர்மானித்துள்ளேன்.
இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக உள்ள இப்பாடசாலை வளர்ச்சியில் நாம் என்றும் முன் நின்று செயற்படுவோம்.இன அடையாளம் எமது உரிமை. சிலர் இதனை இனவாதமாக மாற்றுவதாலேயே எமது நாடு இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியை அடைந்தது.
இளம் மக்கள் பிரதிநிதிகளாக நாம் இதனை மாற்றி அமைப்போம்.என்றும் நாங்கள் உங்களுடன் ”என்று தனது உரையை நிகழ்த்தினார்.
தொடர்ச்சியாக தமிழ் கலை கலாசாரத்தை அடையாளப்படுத்தும் விதமாகவும் இலங்கையின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கணத்தை பறைசாற்றும் வகையிலும் பல கலை நிகழ்ச்சிகள் கல்லூரி மாணவர்களினால் நிகழ்த்தப்பட்டன.
இந்நிகழ்வில் மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த பாடசாலை மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.