குளவி கொட்டு தாக்குதலுக்கு இலக்கான நபரொருவருக்கு நேர்ந்த நிலை!
கண்டியில் உள்ள புஸ்ஸலாவை - மெல்போர்ட் தோட்டப் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.
பெருந்தோட்டப் பகுதியில் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 8 பேர் குளவி கொட்டு இலக்கான நிலையில் வைத்தியசாலை அழைத்துச் செல்லப்பட்ட போது ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஏனைய 7 பேரில் 6 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன் ஒருவர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக வெளகப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் மெல்போர்ட் தோட்டப் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஒருவரே உயிரிழந்ததாக வெளகப்பிட்டிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.