சிறுமியை வன்புணர்ந்த கண்டி பிக்கு ; பெண்ணும் உடந்தை
15 வயதுடைய சிறுமி ஒருவரை, அவரின் தந்தையின் சகோதரர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தொடர்பில் கண்டி பொலிஸ் நிலையத்தினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதன் அடிப்படையில், கண்டி, பஹிரவகந்த பகுதியில் வைத்து சந்தேகநபர் கடந்த 2026.05.20 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பஹிரவகந்த பகுதியில் உள்ள விகாரையொன்றில் வசிக்கும் 25 வயதுடைய பௌத்த பிக்கு ஆவார்.
இக் குற்றச் சம்பவத்திற்கு ஆதரவளித்து, உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் 29 வயதுடைய பெண் ஒருவரும் அதே நாளில் (2026.05.20) பஹிரவகந்த பகுதியில் வைத்து கண்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளின் குழுவொன்றினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் பஹிரவகந்த பகுதியை வசிப்பிடமாகக் கொண்டவராவார். சந்தேகநபரான பிக்கு மற்றும் சந்தேகநபரான பெண் ஆகிய இருவரும் 2026.05.21 அன்று கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர், சந்தேகநபரான பிக்குவை 2026.06.01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், சந்தேகநபரான பெண் தலா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.