இலங்கையில் நேர்ந்த பாரிய அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த பெண் குழந்தை!
கண்டி மாவட்டம் - ஹசலக்க, அட்டபகொல்ல பகுதியில் லொறியின் பின் சக்கரத்தில் சிக்கி ஒரு வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் நேற்றிரவு (29-12-2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குழந்தை, தாய் மற்றும் தந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்ற போது, அங்கிருந்த லொறி ஒன்று புறப்பட்டுச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த குழந்தை மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.