எரிபொருள் இருப்புக்கள் குறித்து முன்னாள் அமைச்சர் காஞ்சனா வெளியிட்ட அறிவிப்பு!
இலங்கையில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் குறித்து முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கம் அளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் காஞ்சன, அதிகாரப்பூர்வ X கணக்கில் இது தொடர்பிலான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில்,
123,888 மெற்றிக் டொன் டீசலும், 13,627 மெற்றிக் டொன் சுப்பர் டீசலும் கையிருப்பாக உள்ளன.
I returned the state vehicles and my office yesterday and leave the Ministry of Power & Energy and the Institutes under my purview in stronger financial positions and with adequate stocks of petroleum products and coal for power generation and fuel supply.
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 23, 2024
All the institutes… pic.twitter.com/C6I3yQnV9n
நாட்டில் ஒக்டோன் 92 வகை பெற்றோல் 90,972 மெட்ரிக் டொன் இருப்பதாகவும், ஒக்டேன் 95 வகை பெற்றோல் 18,729 மெட்ரிக் டொன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 30,295 மெற்றிக் டொன் விமான எரிபொருள் இருப்பதாக காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.