1.85 மில்லியன் டாலருக்கு தனது வீட்டை விற்பனை செய்த கமலா ஹாரிஸ்?
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Haris) வாஷிங்டனில் உள்ள வீட்டை விற்பனை செய்துள்ளதாக த்கவல்கள் தெரிவிக்கின்றன. 2017-ம் ஆண்டு 1.775 மில்லியன் டாலருக்கு வாங்கிய வீட்டை தற்போது 1.85 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் (Kamala Haris) தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு இரண்டு படுக்கையறை கொண்ட 1,730 சதுர அடியிலான வீடு வாஷிங்டனில் இருந்த நிலையில் அந்த வீட்டியை கமலா ஹாரிஸ் 1.85 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்துள்லதாக கூறப்படுகின்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 1.995 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்வதாக தெரிவித்திருந்த கமலா ஹாரிஸ் (Kamala Haris), அதன்பின் 1.85 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார்.
இதேவேளை துணை அதிபர் கமலா ஹரிஸ் (Kamala Haris) ஏற்கனவே சான் பிராஸ்சிஸ்கோவில் உள்ள அப்பார்ட்மென்ட்-ஐ 8.6 லட்சம் டாலருக்கு விற்பனை செய்திருந்தார். இந்த வீட்டை கமலா ஹாரிஸ் 1998-ம் ஆண்டு 2.99 லட்சம் டாலருக்கு வாங்கிருந்ததாக கூறப்படும் அதேவேளை கமலா ஹாரிஸ்க்கு (Kamala Haris) இன்னும சில வீடுகள் உள்ளதாகவும் தெஇவிக்கப்படுகின்றது.
மேலும் 3,500 சதுர அடியில் 3.2 மில்லியன் மதிப்பிலான வீடு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள நிலையில், தற்போது துணை ஜனாதிபதிக்கான வீட்டில் கமலா ஹாரிஸ் (Kamala Haris) வசித்து வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.