பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகும் கமல்; அவருக்கு பதில் இவரா?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த உலகநாயகன் கமலஹாசன் பிப்ரவரி 20ஆம் திகதி முதல் நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக நேற்று அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார் என்ற தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் மூன்று பேரின் பெயர் அடிபட்டுகிறது.
ஏற்கனவே கமலஹாசன் கொரோனா சிகிச்சையில் இருந்தபோது தற்காலிகமாக தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த ரம்யா கிருஷ்ணன் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போவதாக தகவல் வெளியானது.
எனினும் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஏனெனில் கமலஹாசன் அளவிற்கு ரம்யாகிருஷ்ணனால் செய்ய முடியவில்லை என பலரும் கேலி கிண்டல் பண்னியதால் மீண்டும் அந்தப் பெயர் தனக்கு வேண்டாம் என ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் தொகுப்பாளராக பணியாற்ற விரும்பவில்லை என மூஞ்சியில் அடித்தது போல் சொல்லிவிட்டாராம்.
அதன் பிறகு லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் எனக் கேட்டபோது, அவர் தொடர்ந்து படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் வரமுடியாது என மறுத்து விட்டாராம்.
இந்நிலையில் மூன்றாவது தேர்வாக ஏற்கனவே பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் பணப்பெட்டியை போட்டியாளர்களுக்கு அறிமுகம் செய்ய வந்த சரத்குமாரை மீண்டும் தொகுப்பாளராக இருக்கவேண்டுமென பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்களாம்.
எனவே வரும் வாரத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் யார் எலிமினேட் ஆக போகின்றனர் என்பதை விட, யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.