தீவிரமாக களத்தில் இறங்கிய கமல்: அப்போ பிக்பாஸ்?
தமிழகத்தில் தற்போது 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற இருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கு தேர்தலுக்கான பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இதில் மக்கள் நீதி மையத்தின் சார்பாக பிரச்சாரம் நடைபெறும் என்று நடிகரும் கட்சியின் தலைவரும் ஆன கமல்ஹாசன் தெரிவித்திருந்த போதும் தேர்தல் பற்றி எவ்வித பரபரப்பு இன்றி பிக்பாஸ் மற்றும் நடிப்பதில் சில தினங்களாக கவனம் செலுத்தி வந்தார்.
வருகின்ற ஊராட்சி மன்ற தேர்தலுக்காக தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கமல்ஹாசன் முதல் நாளான இன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வாக்கு சேகரிப்பதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில் தனது அடுத்த பிரச்சாரத்தை வரும் 30 ஆம் தேதி அன்று மேற்கொள்ள உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தற்போது எதிர்க்கட்சி நிகழ்த்திவரும் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் மக்கள் நீதி மையம் தனது பங்கை சரிவர அளித்து வருகிறது என்பதை தனது பிரச்சாரத்தின் முக்கிய அம்சமாகும் என நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
இவரின் வருகையால் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தனது படப்பிடிப்புக்கான நேரம், பிக்பாஸிற்கான கால்ஷீட் இதற்கு மத்தியில் தற்போது இந்த தேர்தல் வேலைப்பாடுகள், இவை அனைத்தையும் எந்த அளவிற்கு சிறப்பாக செய்து முடிப்பார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.