"வந்துட்டேனு சொல்லு,திரும்பி வந்துட்டேனு": பிக் பாஸில் மாஸ் என்ட்ரி கொடுத்த கமல்
பிக் பாஸ் சீசன் 5 தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆகி வருகிறார்கள். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தற்போதைய சீசன் வரையில் தொகுத்து வழங்கி வந்தவர் தான் உலக நாயகன் கமல் ஹாசன்.
கடந்த சில நாடுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்று வந்த கமல் ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு ஒன்றினைப் போட்டிருந்தார். இதன் காரணமாக ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ச்சிக்குள்ளானது. இந்த நிலையில் கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
தற்போது கொரோனாவில் இருந்து மீண்ட கமல் ஹசன் இந்த வர நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் மக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த கமல்ஹாசன் அசத்தலாக என்ட்ரி கொடுத்துள்ளார். உங்கள் அன்பினால் மட்டுமே மீண்ட நான், இன்று உங்களுடன் மீண்டும் நான், இனி என்றுமே உங்கள் நான் என்று மாஸாக கூறுகிறார்.