கமல் குணரத்ன- இந்திய இராணுவ பிரதானிக்கிடையே விசேட சந்திப்பு!
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்னவிற்கும் இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாரவனே தலைமையிலான இராணுவ உயர் தூதுக்குழுவிற்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது இன்று (13) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சந்திப்பில் இராணுவ பயிற்சி நடவடிக்கை மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்திய இராணுவ பிரதானி மற்றும் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரின் இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவு சின்னங்களை இருவரும் பரிமாறிக்கொண்டுள்ளனர்.