கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் நியமனம்!
Sri Lankan Tamils
Hospitals in Sri Lanka
Kalmunai
Doctors
By Shankar
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்திய கலாநிதி வைத்தியர் குணசிங்கம் சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் குறித்த நியமனம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய அவர் பின்னர் மட்டக்களப்பிற்கும் தொடர்ந்து வவுனியாவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
கல்முனை பிராந்தியத்தில் கடமையாற்றிய போது அவரது சேவை அளப்பரியதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 02-12-2024 ஆம் திகதிக்கு பிறகு அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US