பாலத்தில் நடந்துச் சென்ற அதிகாரிக்கு நேர்ந்த சோகம்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்
கலா ஓயா பாலம் சேதமடைந்துள்ளமையினால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் இருந்து நேற்றைய தினம் (15-03-2022) பிற்பகல் தவறுதலாக வீழ்ந்து காணாமல்போன வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் வில்பத்து சரணாலயத்தில் பணிபுரியும் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ரத்னாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அவரின் சடலம் புத்தளம் நகரசபை எல்லைக்குரிய சேனைக்குடியிருப்பு மையவாடியில் அடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், புத்தளம் நகரசபை எல்லைக்குள் இரண்டாவது கொரோனா தொற்றாளர் அடக்கம் செய்யப்பட உள்ளதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.