ஒரே இரவில் பேய்களால் கட்டபட்ட பிரபல சிவன் ஆலயம் ; எங்குள்ளது தெரியுமா! அமானுஸ்யங்கள் நிறைந்த அதிசயம்
இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கக்கன்மாத் சிவன் கோயில், பேய்களால் கட்டப்பட்டது என கூறினால் வம்புவீர்களா... ஆனால் உண்மை அதுதான்... அதுமட்டுமல்லாது பல அமானுஸ்யங்கள் நிறைந்த கக்கன்மாத் சிவன் கோயிலுக்கு மாலை 6 மணிக்கு மேல் யாரும் செல்வதில்லையாம்.
சிவபெருமானுக்காக கட்டப்பட்டிருக்கும் இந்த இந்த கோவில், மத்திய பிரதேசத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திருழுக்கும் அம்சங்களுள் ஒன்றாகும்.

அமானுஸ்யங்கள் நிறைந்த கக்கன்மாத் சிவன் கோவில்
கக்கன்மாத் கோவில், மத்தியபிரதேசத்தில் குவாலியர் நகரத்தில் இருந்து, சுமார் 65 கி.மீ தொலைவில் இருக்கும் சிஹோனியாவில் அமைந்திருக்கும் கோவில் ஆகும்.
கக்கன்மாத் சிவன் கோவிலானது, பேய்களால் கட்டப்பட்ட கோவில் என கூறப்படுகிறது. இந்த கோவிலானது, தரையிலிருந்து சுமார் 115 அடி உயரத்தில், இந்த ஆலயம் அமைந்திருக்கிறதாம்.
இதனை, பலரும் புனித ஆலயம் எனக்கூறுவதை விட, மர்மக்கோவில் என்றே கூறுகின்றனர். காரணம், விஞ்ஞானிகளையே குழப்பும் சில விஷயங்கள், இக்கோவிலில் நடைபெறுமாம்.

எந்த கோவிலாக இருந்தாலும், கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, அதில் இருக்கும் சந்துக்கள் பூசிதான் கட்டப்படும். ஆனால், இக்கோவில் மட்டும் கற்களால் மட்டும் கட்டப்பட்டிருக்கிறது.
இதில், சுண்ணாம்பு, சிமெண்ட் என எதுவுமே உபயோகிக்கப்படவில்லை. கற்களாலேயே கட்டப்பட்டிருக்கிறது. அதெப்பெடி, கலவைகள் எதுவும் இல்லாமல் வெறும் கற்களால் மட்டும் இவ்வளவு பெரிய கோயில் கட்டப்பட்டிருக்கும் என்கிற கேள்வி எழலாம். அதற்கு விடையை, இன்னும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்த கோவில், எந்த பசையும் போட்டு கட்டப்படவில்லை என்றாலும், இது பல நூறு ஆண்டுகளை கடந்தும் இக்கோயில் இருக்கிறது.
கக்கன்மாத் கோவில் குறித்த கதைகள்
கதை 1
11ஆம் நூற்றாண்டில், கச்சபகத வம்சத்தை சேர்ந்த மன்னன் கீர்த்திராஜாவின் மனைவி ககன்வதி, தீவிர சிவபக்தையாக இருந்தவராம்.இவருடைய வேண்டுகோளின்படி, 11ஆம் நூற்றாண்டில் இந்த பிரம்மாண்டமான சிவன் கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
கதை 2
கக்கன்மாத் கோயிலை, தனக்காக கட்டச்சொல்லி பேய்களுக்கு, சிவபெருமான் ஆணையிட்டதாகவும், இவற்றை பூதங்கள் சேர்ந்து கட்டியதாகவும் இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
இதில் வரும் கதைகளின்படி, ஒரே இரவில் கட்டிமுடிக்க வேண்டும் என்பதால் பேய்கள், இக்கோவிலை அசுர பலம் கொண்டு கட்டியதாகவும், விடியற்காலையில் கோழி கூவியவுடன் பேய்களின் சக்தி குறைந்துவிடும் என்பதால், அவை கோயிலின் பணிகளை அப்படியே அரைகுறையாக விட்டுவிட்டு மறைந்ததாகவும் நம்பப்படுகிறது.

இந்த கக்கன்மாத் கோவில், எப்படி பல்வேறு இயற்கை சீற்றங்களை கடந்தும், இன்னும் கம்பீரமாக அதே இடத்தில் நிற்கிறது என்பது பலரையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விஷயம் ஆகும். இந்த கோவிலை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இக்கோவில் எப்படி கட்டப்பட்டது என்று தெரியாமல் இருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல், உள்ளூர்வாசிகள் இக்கோவிலுக்குள் ஏதோ ஒன்று இருப்பதாகவும், இக்கோவிலில் இருக்கும் யார் கண்களுக்கும் தெரியாத சக்தி, இதனை பாதுகாப்பதாகவும் சிலர் நம்புகின்றனர்.
இக்கோவிலின் மையப்பகுதியில், பிரம்மாண்டமான சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளது. 120 அடி நீளமுள்ள இந்த கோயிலின் மேற்பகுதியும் கருவரையும் பல நூற்றாண்டுகளாக சேதமடையாமல் பாதுகாப்பாக இருக்கின்றன.
இந்த கோயிலுக்கு செல்ல நுழைவுக்கட்டனம் ஏதும் இல்லையாம். ஆனால், ஒரே ஒரு நிபந்தனைதான். காலை 6 மணிக்கு திறக்கப்படும் இந்த கோவில், மாலை 6 மணிக்கு மூடப்பட்டு விடுமாம். அதற்கு மேல் கோவிலுக்குள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.
கக்கன்மாத் ஆலயத்தை சுற்றிப்பார்க்க 1 மணி நேரமாவது தேவைப்படும் எனவும் கூறப்படுகிறது