சுற்றுலாத் தலமாக மாறவுள்ள கச்சத்தீவு ; வலுக்கும் எதிர்ப்பு
கச்சத்தீவை சுற்றுலாத் தலமாக மாற்றவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் மறைமாவட்டம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
கச்சத்தீவு புனித பிரதேசமாக பேணப்பட்டு வருகின்றமையால், அதனை பாதிக்கும் வகையில் எவ்வித நவடிக்கைகளும் மேற்கொள்ளக்கூடாது என யாழ்ப்பாணம் மறைவாட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் வலியுறுத்தியுள்ளார்.
யாருமே உரிமை கோர முடியாது
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி யாழ். மறைமாவட்டத்தோடு கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கிறோம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்தோடு, அண்மையில் தமிழக அரசியல்வாதிகள் “கச்சத்தீவு இந்தியாவுக்கு சொந்தமானது, அதனை மீளப் பெறவேண்டும்” என பிரசாரம் செய்துவருகின்றார்கள்.
எனவேதான் ஜனாதிபதியின் முக்கியமான நோக்கம் “இது இலங்கைக்கு சொந்தமான தீவு, இதை யாருமே உரிமை கோர முடியாது” என்பதை வலியுறுத்துவதற்காகவே அங்கு சென்றுள்ளார் எனவும் யாழ்ப்பாணம் மறைவாட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் தெரிவித்துள்ளார்.